டிட்லி…புயல் அதிதீவிரமாக மாறுகிறது…..மக்களே உஷார்….வானிலை ஆய்வகம் தகவல்….!!
டிட்லி’ புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள `டிட்லி’ புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த புயலானது வங்கக் கடலில் ஓடிசா மாநிலம் கோபால்பூர் பகுதிக்கு 560 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு 510 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இப்புயலுக்கு `டிட்லி’ என பெயரிடப்பட்டது.
இந்நிலையில் இந்தப் புயலானது தற்போது கோபால்பூருக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே நாளை காலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த புயலான டிட்லி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
DINASUVADU