கருத்து கேட்க தேவையில்லை மக்களிடம்…..அமைச்சர் கருப்பணன் பேச்சுக்கு…மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்….!!
அமைச்சர் கருப்பணன் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம் என கூறியது கண்டனத்துக்கு உரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பது மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் முன்பு மக்களிடம் கருத்து கேட்கும் விதியில் விலக்கு கோருவதும் கடும் கண்டனத்துக்கு உரியது.
மேலும் மத்திய அரிசிடம் அதிமுக விடுத்துள்ள கோரிக்கை உள்நோக்கத்துடன் கூடிய சுயநலம் கொண்டது. இந்நிலையில் மத்திய அரசிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் அமைச்சர் கூறிய கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
DINASUVADU