பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய் ..!!

Default Image

சென்னை வேளச்சேரியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூர தாயை போலீஸார் கைது செய்தனர். மாயமான பச்சிளம் குழந்தை இன்று ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி ஏரிக்கரை அருகில் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் வசிக்கும் கால்சென்டர் ஊழியர் வெங்கண்ணா(32), இவரது மனைவி உமா(27) இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று முன்தினம் திடீரென மின்தடை ஏற்பட்டதால், காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கியதாகவும், அதிகாலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் அருகில் பல இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்காததால் கதறி அழுத தம்பதியினர், வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து குழந்தை மாயமானதாக வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அதிகாலையில் ரோந்து சென்ற போலீஸார், பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்வதை பார்த்ததாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது, உமா தான் குழந்தையை ஏரிப்பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, குழந்தை பால்குடிக்கும் போது தனக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பலமுறை வெங்கண்ணாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்தை ஒப்புக் கொண்டுள்ளார்.இதையடுத்து பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை இரக்கமின்றி கொலை செய்த கொடூர தாய் உமாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்