பரபரப்பிற்கிடையே மதுசூதனன் ஆதரவாளர்கள் வெற்றி..
சென்னை ஆர்.கே.நகரில் மிகுந்த பரபரப்பிற்கிடையே நடைபெற்ற மீனவர் சங்கத் தேர்தலில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகரில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டது. இடைத் தேர்தலுக்குரிய பரபரப்புடன் காணப்பட்ட இந்த தேர்தல் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவாளகளுக்கு இடையேயான மோதலாக கூறப்பட்டது.
இந்நிலையில் மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்கவிருந்த மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் நேற்று மாலை மதுசூதனன் ஆதரவாளர்கள் 6 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 7 பேரின் வேட்பு மனுக்களும், தென் சென்னைக்கு உட்பட்ட 7 பேரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
DINASUVADU