பாலியல் பலாத்காரம் செய்து செய்தியாளர் படுகொலை…
பல்கேரியா நாட்டில் பெண் செய்தியாளர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பல்கேரியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளரான விக்டோரியா மரினோவா ((Viktoria Marinova)) அண்மைக் காலத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் சார்ந்த புலனாய்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் ருசே ((Ruse)) நகரில் பூங்கா ஒன்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்தும் மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது ஐரோப்பிய யூனியனில் ஒரே ஆண்டில் நடைபெற்ற 3 -வது செய்தியாளர் படுகொலையாகும்.
DINASUVADU