"கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும்" வைகோ கைது ஆவேச போராட்டம்…
நக்கீரன் கோபாலை சந்திக்க விடாமல் மதிமுக பொது செயலாளர் வைகோ அனுமதி மறுக்கப்பட்டு சிந்தாரி பேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நக்கீரன் கோபாலை சந்திக்க முயன்ற மதிமுக பொது செயலாளர் வைகோவை அங்கே உள்ள காவல்துறையினர் தடுத்து நிறுத்த்னர்.இதனால் மதிமுக பொது செயலாளர் வைகோ காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது , காவல்துறையையும் , நீதித்துறையையும் கேவலப்படுத்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவை காவல்துறை விட்டு விட்டு பத்திரிக்கையாளர்களை மிரட்டுவது எந்த வகையில் நியாயம்,இது பத்திரிக்கையாளர்கள் , ஊடகங்களை மிரட்டும் வேலை. நக்கீரன்கோபாலை நான் வழக்கறிஞர் என்ற முறையில் சந்திக்க வேண்டும் என்றால் காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்.? நான் காவல்துறை மீது வழக்கு தொடர்வேன் என்றார்.
124 A என்ற தேச துரோக வழக்கை பதிவு செய்து எடப்பாடி பழனிசாமி அரசும் , பிஜேபி அரசும் அராஜகம் செய்கிறது.என் மீது இரண்டு தேச துரோக வழக்கு இருக்கிறது.முதலில் இந்த கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும்.நான் அண்ணா வழியில் வந்தவன் என்று கூறிய வைகோ நக்கீரன் கோபாலை சந்திக்க விடாததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
DINASUVADU