ஐயப்பன் கோவில் : சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி…!!
ஐய்யப்பன் கோவில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடிகேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆனால் இந்த தீர்ப்பிற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.கேரள அரசு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவில் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள். மேலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவும் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல் செய்ப்பட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றனர்.ஆனால் உச்சநீதி மன்றம் ஐயப்பன் கோவில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கலை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
DINASUVADU