திருவாரூர் தொகுதி மட்டும் காலி…!அரசாணை வெளியிடு….தவறிய திருப்பரங்குன்றம் கதி என்ன..??
தமிழகத்தில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளது.
திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உள்ளது.
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏகே போஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் இந்நிலையில் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உள்ளது.
சமீபத்தில் இந்தியதேர்தல் ஆணையர் 4 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.அதில் தமிழக தொகுதியான திருவாரூர்,திருப்பரங்குன்றம் குறித்த இடைத்தேர்தல் அறிப்பு இடம்பெறவில்லை.இது குறித்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் தமிழக செயலாளர் கூறிய காரணங்களுக்காக தேர்தல் அற்விப்பு இல்லை என்று தெரிவித்தார்.இந்நிலையில் தேர்தல் ஆணையம் அமைதி காத்துவருவது மக்களுக்கும் எதற்கு என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. என்பதற்கான அரசாணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இத்தகைய அரசாணை இன்னும் வெளியிடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் திருப்பரங்குன்ற தொகுதியின் கதி என்ன..?? குறித்த நிலைமை பற்றி அரசு மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்.
DINASUVADU