சபரிமலை கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ..! ஆர்.எஸ்.எஸ் சீர்குலைக்க முயற்சி…! கேரள முதல்வர் பினராயி விஜயன்

Default Image

சபரிமலை கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை  சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் .
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எற்க மறுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.அதேசமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு வரவேற்றது.
ஆனால்  சபரிமலை கோயில் விவகாரத்தில் கேரள அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது .மேலும்  பக்தர்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்துகிறது என்று தெரிவித்தது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். கருத்து தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  சபரிமலை கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்தி கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்