கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை …!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதேபோல் நீலகிரி, தேனி, நெல்லை போன்ற மலையோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில் மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 படகுகளில் சென்ற மீனவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.அதேபோல் அவர்கள் இருக்கும் இடங்கள் கணிக்கப்பட்டுள்ளது.அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை.வடகிழக்கு பருவமழை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.