பாம்புகளுடன் விளையாடிய நடிகை..!!
நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றார் காஜல். அங்குள்ள காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது மலைப்பாம்பு ஒன்றை பார்த்து மலைத்து நின்றார். பாம்பு பராமரிப்பாளர், காஜலிடம், ‘பயப்படாதீர்கள். இதை நீங்களும் கையாள முடியும். தோளில் போட முடியும்’ என்றார். முதலில் தயங்கிய காஜல் பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாம்பை தோளில் போட்டுக்கொண்டார். பாம்பின் வெயிட் தாங்க முடியாமல் நடுங்கிய காஜலிடம் ‘பாம்பை தோள் மீது சுமக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டதும், நடுக்கமும் பயமும் கலந்த குரலில் பதில் அளிக்கும் காஜல், ‘பாம்பின் எடையை எனது உடலில் உள்ள எல்லா தசைகளிலும் உணரமுடிகிறது. இதுவொரு பயம் கலந்த பரவசமான உணர்வு’ என்றார்.
பிறகு பயம் தெளிந்தவர் பாம்பை சில நிமிடங்கள் தடவிப்பார்த்து விளையாடிக்கொண்டிருந்தார். இந்த காட்சியை வீடியோவாக காஜல் அகர்வால் தனது இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
DINASUVADU