துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்…!முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் …!மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்ற புகாரை முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என புகார் உள்ளது . முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார். ஓபிஎஸ் – தினகரன் விவகாரமானது இது அவர்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டை ஆகும்.அதேபோல் ஐயப்பனின் மகிமையை அறிந்த இளம்பெண்கள், சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.