திருப்பரங்குன்றம் – திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திருப்பரங்குன்றம் – திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் 5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நாடகாவுக்கும் தேர்தல் தேதிகளை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.ஆனால் ஜனநாயகத்துக்கு விரோதமாக திருப்பரங்குன்றம் – திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் உள்ளாட்சி தேர்தலைக்கூட சந்திக்க தெம்பில்லாத அதிமுக அரசு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் உள்ளது .இதனால் தலைமைச் செயலாளரை வைத்து தேர்தலை தள்ளி வைத்திருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக இருவரும் செயல்பட்டிருப்பது நிரூபணமாகி உள்ளது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.