புதிய சாதனை படைத்த இந்திய அணி …!100 வெற்றிகளை பதிவு செய்தது இந்திய அணி …!
இந்திய மண்ணில் நேற்றைய வெற்றியின் மூலம் தனது 100 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 649 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதன்மூலம், 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 4, முகமது ஷமி 2 விக்கெட் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்தியா ‘பாலோ ஆன்’ கொடுத்தது.இதன் பின் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்த அறிமுக பிரித்திவி ஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு மிகப்பெரிய தோல்வி ஆகும்.
இந்நிலையில் இந்திய மண்ணில் 266 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள இந்திய அணி,நேற்றைய வெற்றியின் மூலம் தனது 100 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளை வென்ற நான்காவது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.