குட்கா முறைகேடு வழக்கு ..!கைதான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவுக்கு ஜாமீன் தரக்கூடாது …! சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு
குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் விசாரணை முடிவடையாத நிலையில் கைதான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.