"யாருக்கு வாக்கு அளித்தோம்" இனி ஒப்புகை சீட்டு இயந்திரம் தேர்தல் ஆணையம் அதிரடி..!!
மிசோரம், மத்தியபிரதேசம் ,ராஜஸ்தான் , தெலுங்கானா , சத்திஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை பார்க்கும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் கூறினார்.
சமீப காலமாக தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகின்றது.தேர்தல் நடைமுறையை மற்ற வேண்டும் , தேர்தல் சீர்திருத்தம் என ஏராளமான விமர்சனம் , கோரிக்கைகள் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வந்தன.இந்நிலையில் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுனில் ஆரோரா , அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தார்.தேர்தல் நடத்தல் விதிமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது என்றும் இந்த முறை ஐந்து மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை பார்க்கும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
DINASUVADU