கன்னியாகுமரியில் மழை எதிரொலி …!விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் …!
கன்னியாகுமரி பகுதியில் மழை காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது
மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும்மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டது.ரெட் அலர்ட்டை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கன்னியாகுமரி ,நீலகிரி,மதுரை,கோவை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்ப்புப்படையினர் சென்றனர்.
இன்று தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் , மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை அதி கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான குறைவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது.குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8ம் தேதி வரை மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.ஆனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது என்றும் அறிவித்தது.
ஆனால் கன்னியாகுமரி பகுதியில் மழை காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.