பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவிலில் நவராத்திரி விழா வருகிற 10-ஆம் தேதி தொடக்கம் ..!
பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவிலில் நவராத்திரி விழா வருகிற 10-ஆம் தேதி தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவில் கர்நாடகா மாநிலம் மங்களூரு நகர் குத்ரோலி பகுதியில் உள்ளது.நவராத்திரி விழா மற்றும் தசரா விழா இந்த கோவிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த ஆண்டும் நவராத்திரி விழா வருகிற 10 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மகாநவமி உற்சவம் நடக்கிறது. காலை 11.50 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நவதுர்கைகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.மேலும் தசரா விழா 14ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது .