விளக்கமளிக்கிறார் OPS…!!
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைப்பதற்கு என்னை சந்தித்து பேசினார் என்றும் , இரண்டாவது முறையும் சந்தித்து பேச நேரம் கேட்டார் என்றும் TTV தினகரன் பத்திரிக்கையாளரிடம் கூறினார்.இது தமிழக அரசியலலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.அது மட்டுமில்லாமல் நான் பொய்யாக கூறினால் எங்கள் மீது ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்கட்டும் என்றும் கூறினார்.
இது இன்று காலை முதல் பேசும் பொருளாக மாறியது.இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் , நிர்வாகிகள் இது குறித்து கருத்து தெரிவித்தாலும் ஓ.பன்னீர்செல்வம் எதுமே பேசாமல் இருந்தது பரபரப்பை உண்டாக்கியது.இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிக்க உள்ளார்.
DINASUVADU