அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!

Default Image

2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.Image result for டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வஜே, நாடியா முராத் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு வருபவர். காங்கோ நாட்டில் ஏராளமான போராளிக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் பெண்களைக் கடத்திச் சென்று வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வஜே பெண்களுக்கான மருத்துவர் ஆவார். போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
ஒரு நாளைக்கு 18 அறுவை சிகிச்சை வரை செய்யக்கூடிய அளவிற்கு பணியாற்றி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் எதும் வாங்காமல் மருத்துவம் பார்க்கக் கூடியவர். போர்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருபவர்.Image result for டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நாடியா முராத் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர். குர்து மனித உரிமை போராளியாக செயல்பட்டு வருகிறார். ஐஎஸ் அமைப்பினர் ஈராக்கில் ஏராளமான மக்களை கொன்று குவித்து வந்தனர். இந்நிலையில் சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்காக உலகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் 10 ஆல்பரட் நோபல் நினைவு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்