ரூ 36,000,00,00,000 மதிப்புள்ள ஏவுகணை ஒப்பந்தம்: அமெரிக்கா எச்சரிக்கையை மீறி இந்தியா அதிரடி..!!
இந்தியா-ரஷியா இடையே நடைபெறும் 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்க்காக இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி 36,000 கோடி மதிப்பில் எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்…..
இன்று ரஷ்ய அதிபர் புத்தினுடன் இந்தியா மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் -400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.36 ஆயிரம் கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எச்சரிக்கைய மீறி கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது. தற்போது இரு தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது இந்த ஒப்பந்தம்…
DINASUVADU