பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க உத்தரவு …!பாஜக தலைமை அதிரடி உத்தரவு
பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு சார்பில் ரூ.2.50 குறைக்க அம்மாநில முதல்வர்களுக்கு பாஜக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .
இதனிடையே கடந்த சில வாரங்களாகாவே பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது.லிட்டருக்கு ரூ.85-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது .பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் அறிவித்தார்.இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவாதாவும் அறிவித்தார். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினை 1 ரூபாய் வரை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை 2.50 ரூபாய் வரை குறைய உள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரி ரூ.1.50 குறைக்கபடுவதால் சாமானிய மக்களுக்கு லிட்டருக்கு ரூ.5 வரை பலன் கிடைக்கும்.தற்போதைய பொருளாதார நிலையை அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது .ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு சார்பில் ரூ.2.50 குறைக்க அம்மாநில முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி,பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளனர்.