கொழுபொம்மையுடன் "நவராத்திரி" கொண்டாடிய பிரபலம்….!!

Default Image

நவராத்திரி என்றலே கொழுப்பொம்மை தான் பளீச்சென்று ஞாபகத்துக்கு வரும் வீட்டில் ஒரே குஷி எல்லோருடைய சந்தோஷ சிரிப்பு தினமொரு பிரசாதம்,என்று வீடே விழா கோலம் பூண்டு காணப்படும் 9 நாட்களும் பாடல்களும்,பஜனைகளும் பக்கத்து வீட்டுக்கரரையும் தட்டி எழுப்பி அழைத்து வரும்.பஜனை,பாடல் என்றதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது பாடகி சைந்தவி.
Related image
 
எந்த ஒரு ஸ்பெஷல் தினமானலும் இவரின் கச்சேரியின்றி இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு அவர் ஸ்பெஷல் அதே போல் சிறந்த ஆன்மீக பக்தரும் கூட இந்நிலையில் அவருடைய நவராத்திரி பற்றி ஒரு நாளேடுக்கு பேட்டி அளித்தார்.
Image result for சைந்தவி.
அதில் நவராத்தி குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.நவராத்திரி எப்படி வீட்டில் கொண்டாடுவிர்கள் என்ற கேள்விக்கு சைந்தவி கூறினார்.அதில் எல்லா நவராத்திரியின்போதும் என்னைப் பாட்டு பாட அழைப்பாங்க. சின்ன வயசுல இருந்து நிறைய பாடுறதால பாட்டுதான் சட்டுனு ஞாபகத்துக்கு வரும். எல்லா பக்திப் பாடல்களும்  என்னோட ஃபேவரைட்தான் பொம்மைகளும் ரொம்பப் பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா, கிருஷ்ணர்-ராதா என்னோட ஆல்-டைம் ஃபேவரைட்.
Image result for சைந்தவி. கச்சேரி
அதுல சாய்ந்தபடி நின்று ராதையை கிருஷ்ணன் தாங்கியபடி இருக்கும் கிருஷ்ணர் பொம்மை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல, செட்டியார் பொம்மை க்யூட்டா இருக்கும் கிருஷ்ணர் பொம்மைகள் மீது எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படி பிடிக்க கு ஒரு காரணம் இருக்கு.
Related image
சின்னப் பசங்களுக்கு கொலு நாள்கள்ல வேஷம் போட்டு விடுவாங்கள்ல அது மாதிரி எங்க வீட்டுலயும் செய்யும்போது எனக்கும் எங்க அண்ணனுக்கும் கிருஷ்ணர் வேஷம்தான் கிடைக்கும்.அப்பப்போ முருகன் வேஷம் போட்டுவிடுவாங்க. ஒன்பது நாள்கள்ல ஏதாவது ஒருநாள்தான் வேஷம் போட்டுவிடுவாங்க.
ஆனால் அந்த ஒருநாள் எப்போ வரும்னு ரொம்ப ஏங்குவேன். அந்த ஒருநாள் முழுக்க அந்தக் கடவுளாகவே நாங்க  எங்களை நினைச்சுக்கிட்டு வாழ்வோம். செம ரகளையா ஜாலியா இருக்கும். கச்சேரிகள் இருக்கறதால, விரதம் மட்டும் இருக்க முடியாதது மற்றபடி எந்தக் குறையும் இல்லாமப் போகுது நவராத்திரி.
Related image
கிருஷ்ண ஜெயந்தி, வரலட்சுமி விரதம் மாதிரியான எல்லா பண்டிகைகளையும் சரியா ஃபாலோ பண்ணுவேன். ஸ்லோகம், மந்திரம் எல்லாம் எங்க அம்மாதா கத்துகொடுத்தாங்க   நவராத்திரிக்கு ரொம்ப விசேஷமான லலிதா சஹஸ்ரநாமம் நான் தினமும் பூஜையில் படிக்கிற மந்திரம். ஶ்ரீசக்கரத்துக்கு குங்கும அர்ச்சனை செய்வது, லலிதா சஹஸ்ரநாமம் படிப்பது என பூஜை, கடவுள் வழிபாடுகளை இப்போ வரைக்கும் நான் தொடர்ந்து செய்யுறேன்.
முதல் மூன்று நாள் துர்கை வழிபாடு, அடுத்த மூன்று நாள் லஷ்மி வழிபாடு, கடைசி மூன்று நாளும் சரஸ்வதி வழிபாடுங்கறதுதான் முறை. இதுல, என்னுடைய பாட்டுக்கு உபயோகப்படும் எல்லா பொருள்களையும் தெய்வமாக மதிச்சு பூஜிக்கிற நாளான சரஸ்வதி பூஜைதான் என்னோட ஃபேவரைட். பாட்டுக்கும் படிப்புக்கும் ரொம்ப முக்கியமான கடவுள் சரஸ்வதிதான் என்பது ஒரு காரணம்.
Image result for சைந்தவி. கச்சேரி
அன்னைக்கு, பாட்டுப் புத்தகம், வீணை, தம்புரா, ஸ்ருதி பாக்ஸ், கிதார் போன்ற முக்கியமான பொருள்களை எல்லாம்வெச்சு வழிபடுவோம். அடுத்த நாள் விஜயதசமி அன்னிக்கு, இதுவரைக்கும் எனக்குப் பாட்டு சொல்லித் தந்த எல்லா ஆசான்களையும் முடிஞ்சளவு நேர்ல போய் பார்த்து நன்றி சொல்லிடுவேன்.’’ – தனது நவராத்திரி அனுபவங்களைப் குஷியோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்