விஜய்க்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும் வரட்டும்..! அமைச்சர் உதயக்குமார்
விஜய்க்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரவேண்டியதுதானே என்று அமைச்சர் உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது .இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த விஜய் ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர்.
பின்னர் சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள். அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசினார்.
இந்நிலையில் நடிகர் விஜய் பேச்சுக்கு அமைச்சர் உதயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அரசியலில் குதிக்க வேண்டும் என விஜய் நீண்ட நாளாக காத்திருக்கிறார்”.அவரது முயற்சி பலிக்கவில்லை”.அரசியலில் குதிக்க விஜய்க்கு பயம்” உள்ளது.அவருக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வரவேண்டியதுதானே.விஜய் தன்னை எம்.ஜி.ஆர் என்று நினைக்கிறார்.மேலும் வசனம் பேசுவது மட்டுமே உங்களின் வேலை”.

நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.நடிகர்கள் எதற்கு முதல்வராக நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர் முதல்வராக செயல்படுவது சாதாரண விஷயமல்ல. சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.