"EPS , OPS இருவரும் பெருச்சாளிகள்" "ஜெயக்குமார் ஒரு ஆமை" கலாய்த்த TTV வைரலாகும் வீடியோ..!!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து TTV தினகரன் செய்தியாளரிடம் பேசும் போது OPS ,EPS_பெருச்சாளிகள்அவர்களை போராளிகளுடன் இணைத்து பேசுவதா என்று நக்கலாக பதிலளித்தார்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடிமுடித்து நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கடந்த செப்டம்பர் 30 (ஞாயிறு) அன்று மாலையில் பிரமாண்டமாக அரசு சார்பில் நடைபெற்றது.
அப்போது மீன்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது , சமூக வளர்ச்சிக்காக எதிரிகளை களமாடிய போராளி பிடல் காஸ்ட்ரோ , சேகுவேரா போல நம்முடைய அண்ணன்மார்கள் EPS அவர்களும் , OPS அவர்களும் தமிழக மக்களின் துயர் துடைக்க அம்மா வழியில் நமக்கு இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.இவர் பேசிய அடுத்தவினாடியே சமூக வலைதள நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு அமைச்சரின் கருத்தை கலாய்தனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை செயலாளர் TTV.தினகரன் அமைச்சர் , அண்ணன் ஆமை ஜெயக்குமாருக்கு வஞ்சக புகழ்ச்சி அதிகமாக மாறிவிட்டது.சேகுவேரா எவ்வளோ பெரிய போராளி அவரு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தியத்தை எதிர்த்து போராடியர். சேகுவேராவையும் , பிடல் காஸ்ட்ரோவை_யும் OPS ,EPS_க்கு இணைய சொல்லுறாரு.கியூபா நாட்டுல எவ்வளோ சூப்பரான ஆட்சி நடத்துனாரு , ஊழலற்ற ஆட்சி நடத்தி சிறப்பான நாடாக கியூபா நாட்ட மாத்துன பெரிய போராளிகளை இந்த பெருச்சாளிகளுக்கு இணையாக பேசுவதை உண்மையில் அவரு தெரிஞ்சு பேசுறாரா என்று நக்கலடித்தார்,இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.அது மட்டுமில்லாமல் அதில் அமைச்சரை ஆமை என்றும் திட்டியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் பகிரப்பட்டு வருகின்றது.
DINASUVADU
https://www.facebook.com/PoliticalPresstitutes/videos/399210877279326/