"ஐயப்பன் கோவிலில் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை" கேரள முதல்வர் அதிரடி…!!

Default Image
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை, பெண் பக்தர்கள் வந்து செல்ல முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பை எதிர்த்து, பந்தளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை. தீர்ப்பை முழு மனதுடன் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோலவே சபரிமலை கோயிலுக்கு பெண்கள் வந்து செல்ல தேவையான வசதிகள் செய்துத்தரப்படும். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’’ எனக் கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்