தேநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்…! தேநீரை குடிப்பதற்கு முன்பு இதெல்லாம் நியாபகம் வச்சிக்கோங்க…..!!!
தேநீர் என்பது நாம் வாழ்வோடு இணைந்தது ஆகும். காலையில் எழுந்தவுடன் நாம் தேடுவது தேநீரை தான். ஏனென்றால் அதனை குடித்தால் தான் நமது உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும் மற்றும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
தேநீர் குடிப்பது நல்லது என்றாலும், இந்த முறைகளிலில் எல்லாம் தேநீர் அருந்த கூடாது :
- தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிக்க கூடாது. ஏனென்றால் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது அதின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் புதியதாக தயாரிக்கப்பட்ட தேநீரை குடிப்பதே நல்லது.
- வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதல்ல. ஏனென்றால் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் போது உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதோடு, பசியின்மையையும் அதிகரிக்கிறது. அப்படி வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் போது அதனுடன் பிஸ்கட் சேர்த்து கொள்வது நல்லது.
- காலையில் எழுந்த உடன் தேநீர் குடிக்க கூடாது. இது இயற்கையான பசியை குறைத்து, இறுதியில் எடையை அதிகரிக்க செய்கிறது.
- சாப்பாட்டுக்கு முன் டீ குடிக்க கூடாது. இவ்வாறு டீ குடிக்கும் போது, உணவில் உள்ள சத்துக்கள் கிடைக்கவிடாமல் தடுக்கிறது.
- கர்ப்பிணி பெண்கள் அதிகமாக தேநீர் அருந்த கூடாது, இது வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை தடுக்கிறது.