ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் …!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றுடன் (அக்டோபர் 2-ம் தேதி) முடிவடைந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார் தீபக் மிஸ்ரா.மத்திய அரசு அவரின் பரிந்துரையை ஏற்றது.இந்நிலையில் ரஞ்சன் கோகோய்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.இவர் உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதி ஆவார்.அதேபோல் வட கிழக்கு மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆவார்.