மாமாவின் வெறி செயல் : தோஷம் இருப்பதாக கூறி 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம்..!!
டெல்லியை சேர்ந்த 23 வயது பெண்ணை அவரது உறவினர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி அச்சுறுத்தி உள்ளார். இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது
அந்தப் பெண்ணை அவரது திருமணத்திற்குப் பிறகு உறவினர் அழைத்து உள்ளார். உடனடியாக இந்த விஷயத்தை தனது கணவரின் தந்தையின் கவனத்திற்குக் கொண்டு சென்ன்று உள்ளார்.
மாமனார் நரேலா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடந்த செப்டம்பர் 13 அன்று ஒரு புகார் பதிவு செய்தார். அன்றே குற்றம் சாட்டபட்ட தந்தை வழி மாமா போலீசார் கைது செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை டெல்லி பெண்கள் ஆணையத்தை தொடர்பு கொள்ள உதவி உள்ளது.
DINASUVADU