"சாப்பிட்ட தட்டை கழுவும் ராகுல் , சோனியா" வைரலாக வீடியோ..!!

Default Image
மகாராஷ்டிராவின் வார்தாவில் சவக்ராம் ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை ராகுல் காந்தி- சோனியாகாந்தி கழுவினர்.
மகாத்மா காந்தியின் 150 -வது  பிறந்த தினத்தையொட்டி, பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காதியும் , சோனியா காந்தியும் சவக்ராம் ஆசிரமம்  சென்று இருந்தனர்.  இந்த நிழக்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி  உறுப்பினர்கள் ஆகியோரும்  பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராகுல் 1986 ஆம் ஆண்டு தனது தந்தையும் முன்னாள் பிரதம மந்திரி மறைந்த ராஜீவ் காந்திநினைவாக  இந்த ஆசிரமத்தில் மரகன்று ஒன்றை  நாட்டு இருந்தார்.  இது ராகுல் ஆசிரமத்திற்கு இரண்டாவது முறையாகும். அவர் முன்னர் ஜனவரி 24, 2014 அன்று ஒரு மரக்கன்றை  நட்டு வந்தார்.
நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு   சாப்பிட்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவினர். மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தட்டுகள் கழுவ ஒரு குழாய் அருகே அவர்கள் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இந்த வீ டியோவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்