இந்தியவீரர் இவர் தான் "கிரிக்கெட்டின் கடவுள்-இவர் தான் கிரிக்கெட்டின் மன்னர் "உருகிய ஹாங்காங் அணி வீரர்…!!

Default Image
இந்திய வீரர்களில் சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்  என்றால், கிரிக்கெட்டின் மன்னர் தோனி என்று ஹாங்காங் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஈஷன் கான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Related image
 
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட் செய்தது இந்தப் போட்டியில் தோனி டக்அவுட்டில் வெளியேறினார்அனுபவமான பந்துவீச்சால் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
Related image
 
இந்நிலையில் அவரின் விக்கெட்டை ஈஷன் கான் வீழ்த்தினார். இந்தப் போட்டி முடிந்த பின், ஹாங்காங் அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஓய்வறைக்கு கேப்டன் ரோஹித் சர்மா, தோனி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்குமார் உள்ளிட்ட பலர் சென்று அவர்களை சந்தித்துப் பேசினார்கள். அவர்களுடன் புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.
Image result for DHONI
அதிலும் தோனியின் விக்கெட்டை ஈஷன் கான் வீழ்த்தியவுடன், களத்தில் தரையில் தலைவைத்து வணங்கி இறைவனைத் தொழுது நன்றி செலுத்தினார். தோனி விக்கெட்டை வீழ்த்தியதில் அப்படி என்ன இவருக்குப் பெருமை என்பது பார்ப்பவர்களை வியக்க வைத்தது.
Image result for ஈஷன் கான்
இந்தச் சம்பவம் குறித்து ஈஷன் கான் பேட்டி அளித்தார். என் வாழ்க்கையின் பாதி கனவு இந்த ஆசியக் கோப்பையில் நிறைவேறிவிட்டது. நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்தில் சச்சின் தெண்டுல்கரையும், தோனியையும் ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
Image result for ஈஷன் கான்
அதற்குள் சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், தோனியின் விக்கெட்டை ஆசியக் கோப்பையில் வீழ்த்தியவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனால், நான் தலைவணங்கி இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.
என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டின் மன்னர் தோனி. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத இருக்கிறேன், அதில் தோனி முக்கியப் பகுதியாக வருவார், அந்தப் புத்தகத்தை என்னுடைய பேரனுக்கு நான் வாசிக்க வேண்டும். ஏனென்றால், வாழ்க்கை சிறந்த தொடர்கதைதானே என்று ஈஷன் கான் தெரிவித்தார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்