பிரிந்தது முக்குலத்தோர் புலிப்படை….!பொதுச்செயலாளர் பாண்டித்துரை தொடங்கினர் புதிய அமைப்பு …!சிக்கலில் கருணாஸ்

Default Image

மதுரையில்  முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து பிரிந்து முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை புதிதாக முக்குலத்தோர் தேவர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.
Related image
செப்டம்பர் 23 ஆம் தேதி அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதன் பின் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல் அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.பின்னர் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் மீண்டும் காவல்துறை தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.அதன்பின் ஜாமீன் மனு மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜரானார்.
பின் சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்.மனுவை தள்ளுபடி செய்தது.
அதேபோல் சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த 2 வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீதும் கைது செய்யப்பட்டார்.
ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை தாக்கியது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த தாக்குதல் தொடர்பாக கருணாஸ் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டார்.ஐபிஎல் போராட்டம் தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் மீண்டும் ஆஜரானர்.
ஆஜரான பிறகு ஐபிஎல் போட்டியின்போது தடையை மீறி ஊர்வலம் சென்ற வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு அக்டோபர் 4 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டது.அதேபோல் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியதாக கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிய போதிய முகாந்திரம் இல்லை.இந்த புகாரில் கருணாசை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
Image result for கருணாஸ்
பின் ஐபிஎல் போராட்ட வழக்கில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மனு தாக்கல் செய்தார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது முக்குலத்தோர் புலிப்படை விரிசல் ஏற்பட்டுள்ளது.முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராக நடிகர் கருணாஸ் இருந்துவருகிறார், . இவர், நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திருவாடானை தொகுதியில், அ.தி.மு.க. சார்பாக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு அ.தி.மு.க., சசிகலா அணி என்று மாறிமாறி இருந்து வருகிறார்.
Image may contain: 1 person
இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து பிரிந்து  பாண்டித்துரை புதிதாக முக்குலத்தோர் தேவர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.இந்த அமைப்பிற்கு பொதுச்செயலாளர் பாண்டித்துரை ஆவார்.
இதன் பின்னர் பாண்டித்துரை பேசுகையில் “கருணாஸுக்கும் தேவர் சமுதாயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அமைப்பின் தலைவராக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சந்தானக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாட்டுக் கறிக்காகவும், ரத யாத்திரைக்காகவும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த கருணாஸ், தேவர் பெயரை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியதற்காக வெளிநடப்பு செய்தாரா? என்றும் பாண்டித்துரை கேள்வி எழுப்பினார்.
முன்னதாக முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக பாண்டித்துரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)