கோவில்பட்டியில் நர்சிங் மாணவி தயாட்சினி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு  சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்…..

மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்….

மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை கண்டித்தும், போலியாக பதிவு செய்துள்ள FIRயை இரத்து செய்து குற்றவாளி காந்திராஜ் கைது செய்யப்பட வேண்டியும், மாணவி குடும்பத்திற்கு இழப்பீடாக 25 இலட்சம் வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது……….

இப்போராட்டத்திற்கு SFI தாலுகா செயலாளர் சுக.ஆனந்த் தலைமைதாங்கினார்CITU தெய்வேந்திரன்,SFI மாவட்ட தலைவர்அமர்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இறுதியாக SFI மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான எஸ்.சுரேஷ்பாண்டி நிறைவுரையாற்றினார்.மாநகர தலைவர் ஜாய்சன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், காமராஜ் கல்லூரி பொறுப்பாளர் சுலேராஜ்,எட்டையாபுரம் பொறுப்பாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்…….

author avatar
Dinasuvadu desk

Leave a Comment