"பல பெண்களுடன் தொடர்பு" "உயிருக்கு ஆபத்து" பாதுகாப்பு கேட்கும் இந்திய கிரிக்கெட் வீரர்
மனைவி மூலம் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்ட இருந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் வெக்கபந்துவீச்சளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு புகார்களை முன் வைத்தார்.ஷமிக்கு பல்வேறு பெண்களோடு தொடர்பு இருப்பதால் அதிக நேரம் அந்த பெண்களுடன் அவர் நேரத்தை செலவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.மேலும் அவர் பாகிஸ்தான் அணியுடன் ஸ்பாட் பிக்சிங் புகாரையும் அவர் தெரிவித்திருந்தார்.இதனால் இவர்கள் இருவருக்கும் கருத்து மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதில் முகமது ஷமி மீதான ஸ்பாட் பிக்சிங் புகாரின் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி பிசிசிஐ இந்த பிரச்சனையை முடித்து வைத்தது.இதனால் இவர்களின் குடும்ப பிரச்னை மட்டும் தொடர்ந்து நடந்து வந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மனைவி மூலம் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முகம்மது ஷமி அம்ரோகா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல் தெரிகின்றது.அதை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஹேமந்த் குமார் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஷாகாஸ்கர் அலி நகரில் தனது குடும்பத்துடன் முகம்மது ஷமி வசித்து வருகிறார்.இந்திய அணிக்கு விளையாடாத நாட்களில் சமிக்கு ஒரு தனி பாதுகாப்பு அதிகாரி போடப்பட்டு இருந்தது.தற்போது அந்த பாதுகாட்பு அதிகாரி திரும்ப பெறப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார் முகம்மது சமி.
DINASUVADU