"நான் அவர் பந்தை அடிக்க பயந்தேன்" மனம் திறந்த சேவாக் ..!!
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தான் கிரிக்கெட் விளையாடியபோது, யாருடைய பந்துவீச்சுக்குப் பயந்தேன் என்பதைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் என்று ராசிகர்களால் பேசப்பட்டவர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக். எதிராணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் வெளுத்து வாங்கும் வல்லமை படைத்தவர் வீரேந்திர சேவாக்.
இன்று சமூக வலைதளத்தின் லைவ் சாட் வாயிலாக இன்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து ரசிகர்களுடன் உரையாடிய சேவாக். அப்போது, ரசிகர்களிடம் நான் ஒரு பந்துவீச்சாளரின் பந்துகளை கண்டு பயந்துள்ளேன் என்றார்.தொடர்ந்து பேசும் பொது நான் பயந்த பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தான் என்றார் வெளிப்படையாக.சேவாக் பேசும் போது அக்தர் பந்து எப்போது தலையை தாக்கும் , எப்போது காலை தாக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.நிறைய பவுன்சர்கள் வீசி எனது தலையை அக்தர் காயப்படுத்தியுள்ளார். பலமுறை அவரது பந்துவீச்சைக் கண்டு பயந்துள்ளேன். அதேநேரம், அவரின் பௌலிங்கை நொறுக்குவது தனி மகிழ்ச்சி” எனக் கூறினார்.