விவாகரத்து சட்டவிதியை தளர்த்தியது உச்சநீதிமன்றம்..!!
உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற சட்டவிதியை தளர்த்தி, ஒரு தம்பதிக்கு விவாகரத்து வழங்கியுள்ளது.
டெல்லியில் 2016ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட அந்த தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நண்பர்களாக பிரிந்து விடுவது என்று இருவரும் புத்தி சுவாதீனத்தோடு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை ஏற்பதாக கூறி, விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிபதிகள் குரியன் ஜோசஃப், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விவாகரத்து கோரியுள்ள கணவனும் மனைவியும் நன்கு படித்தவர்கள் என்பதோடு, வழக்கின் பின்னணியை ஆராயும்போது விவாகரத்திற்காக இன்னும் 6 மாதம் இருவரும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
DINASUVADU