ரூபாய் 10,56,00,000_துடன் உச்சநீதிமன்றத்தில்ஆஜரானார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்..!!

Default Image

மணல் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட துறைமுகத்தில் கட்டுமானத்திற்கு உகந்ததில்லை என்று கூறி 55,000 டன் மலேசிய  மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தக் கூடாது.தமிழக அரசு இந்த மணலை பெற்றுக்கொண்டு  ரூபாய் 11கோடியே 27 லட்சம் வழங்குவதாக தெரிவித்தது.ஆனால் தமிழக அரசாங்கம் பணம் இல்லை என்றும் , இரண்டு நிறுவனங்கள் பிரச்னை என்பதால் பணத்தை யாருக்கு வழங்க என்ற குளறுப்பிடி உள்ளது என்று பணம் வழங்காமல் மறுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதி மன்றம் வந்து தற்போது உச்சநீதிமன்றம் வந்துள்ளது.இதற்கு நேரில் வந்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி வந்த சம்மனை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.அது மட்டுமில்லாமல் கொட்டி வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ரூபாய் 10 கோடியே 56 லட்சத்தை உச்சநீதிமன்றத்தில் காட்டினார்.இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்