மதுக்கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்..!!
சில்லறை தராததால் ஆத்திரமடைந்து மதுக்கடை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள்…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் உள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று மது அருந்த வீரேந்திர சிங் ராவத் என்ற பாஜக நிர்வாகியும் அவரது ஆதரவாளர்களும் மது அருந்த வந்தனர்.மதுக்கடைக்கு வந்த வீரேந்திர சிங் ராவத், ஊழியர்களிடம் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, சில்லறை கேட்டுள்ளார். ஊழியர்கள் சில்லறை இல்லை என தெரிவிக்க, ஆத்திரமடைந்த வீரேந்திர சிங்கும் அவரது ஆதரவாளர்கள் அப்போது அங்கே இருந்த பணியாளரிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர்.இறுதியாகக அது கைகலப்பாக மாரி பாஜக நிர்வகிக்கும் அவர்களது ஆதரவாளர்களும் பணிபுரியும் ஊழியர்களை, கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த ஊழியர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வீரேந்திர சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் அந்த மதுக்கடை போர்க்களம் போல காட்சியளித்தது.
DINASUVADU