“32 முறை எனக்கு காதல் வந்துள்ளது” நடிகர் சேதுபதி அனைவரையும் மிஞ்சி விட்டார்…!!
சென்னை,
திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.
அதில் திரிஷா, விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது நடிகர் விஜய் சேதுபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது பத்திரிக்கையாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியிடம் உங்களுக்கு எத்தனை முறை காதல் வந்து இருக்கிறது என்று கேட்டார்.அதற்க்கு நடிகர் விஜய் சேதுபதி எனக்கு 32 முறை காதல் வந்து இருக்கிறது என்று பதிலளித்தார்.
DINASUVADU