மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர்: ரோஹித் சர்மா , தவான் , தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம்…!!

Default Image

அக்டோபர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ஷிகர் தவண் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், புதிய வீரர்களாக மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் முதல் முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய தலைமைத் தேர்வாளர் எம்எஸ்கே. பிரசாத் தலைமையில் புதன்கிழமை தேர்வாளர் குழுக்கூட்டம் கூடுவதாக இருந்தது.

ஆனால், அஸ்வின், விராட் கோலி, இசாந்த் சர்மா ஆகியோருக்கான யோயோ டெஸ்ட் மற்றும் உடற்தகுதி தேர்வு இருந்ததால், அந்த ஆய்வுகள் முடிந்தபின் அறிக்கை கிடைத்தபின் வீரர்கள் தேர்வு வைத்துக்கொள்ளத் தேர்வாளர் தலைவர் பிரசாத் முடிவு செய்தார். அனைத்து அறிக்கைகளும் கிடைத்தபின் இன்று தேர்வுக்குழுக்கூட்டம் நடந்தது.

இதில் காயத்தில் இருந்து குணமடைந்த அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், காயத்தில் இருந்து முழுமையாக மீளாத இசாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.

இங்கிலாந்து தொடரில் சொதப்பிய ஷிகர் தவணுக்கும், தினேஷ் கார்த்திக்கும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து விராட் கோலி குணமடைந்துவிட்டதால், அவர் கேப்டன் பதவிக்கு மீண்டும் வந்துள்ளார். ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதிய வீரர்களாக மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் முதல் முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளனர்.

அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி(கேப்டன்), கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த், ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்