உயிரை கொள்ளும் கோழி இறைச்சி..!!

Chicken

பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.

கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்ளிலும் கல்லீரலிலும் கான்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம். இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம். கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது.

கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும். நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிகமாகவும் வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும், பிராய்லர் கோழிகளில் வெள்ளைக் கரு அதிகமாக இருக்கிறது. இப்போதைக்கு பிராய்லர் என்பது மக்களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்