தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!மீனவர்கள் செல்ல வேண்டாம்..!வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 12% அதிகமாக இருக்கும். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தென் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை குமரி கடல், தென் மாவட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.