‘இந்தியாவின் காவல்காரன் மோடி’ திருடலாமா ? ராகுல் காந்தி கேள்வி..!!
சித்ரகூட், செப்.29- காங்சிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. யில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தில் நேற்று முன்தினம் தனது 2 நாள் பிரசாரத்தை ராகுல் தொடங்கினார். அலகாபாத்தில் இருந்து சித்ரகூட்டிற்கு ஹெலிகாப்டர் மூலமாக ராகுல் வந்தடைந்தார் ராகுல். பின்னர் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது :- பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் காபர்சிங் வரி விதிப்பு மூலம் சிறு தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை மோடி அரசானது அழித்து விட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் காபர்சிங் வரியை உண்மையான வாரியாக மாற்றுவோம். குறைந்த விகிதத்தில் ஒரே ஒரு வரியை அமல் படுத்துவோம். அனைத்து சக்தியும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும். இந்தியாவின் காவல்காரனே திருட்டில் ஈடுபட்டார் என்பது போன்று ரபேல் ஒப்பந்தம் உள்ளது. யார் இந்தியாவின் காவல்காரர் என்று கூறுகிறாரோ அவரே ரூ.30 ஆயிரம் கோடியை ரபேல் ஒப்பந்தம் என்ற பெயரில் தொழிலதிபர் அனில் அம்பானியின் பாக்கெட்டில் வைக்கிறார். அனில் அம்பானி ஒரு விமானம் கூட தயாரித்தது கிடையாது. ஆனால் அவருக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய்யான தகவல்களை அளித்து வருகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
DINASUVADU