தூத்துக்குடி புறக்கணிப்பு : “எடப்பாடி ஏன் இன்னும் வரவில்லை” கீதா ஜீவன் MLA கண்டனம்..!!

Default Image

தூத்துக்குடி, செப். 29- தூத்துக்குடி துப்பாக் கிச் சூட்டில் பாதிப் படைந்த குடும்பத்தினரை ஏமாற்றிய முதல்வர் எடப்பாடிபழனி சாமிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் திருமதி. பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கை வருமாறு:- தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஸ்டெர் லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாள் அறப்போராட் டம் நடத்தினர். தி.மு.க.வும்; போராட்டத்தில் மக்களோடு மக்களாக பங்கு கொண்டது. போராட்டத்தை மதிக்காமல் முதுகெலும்பில்லாத மக்கள் விரோத எடப்பாடி அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மக்களின் கோரிக்கையை, போராட்டத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் அடக்குமுறை மூலம் துப்பாக்கி சூட்டை 22.5.2018 அன்று நடத்தியதால் 13பேர் இன்னுயிர் நீத்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அதனால் மக்கள், எடப் பாடி அரசு மீது வெறுப் படைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், காவல்துறை இளைஞர்கள மீதும், பெண்கள் மீதும் வழக்குப் போட்டு கைது செய்து தொடர்ச்சியாக பல மாதங்களாக துன்புறுத்தியும் பயமுறுத்தியும் வந்தார்கள். தூத்துக்குடியில் அரசியல் கட்சியினருக்கோ, வேறு எந்த அமைப்பிற்கோ, சங்கங்களுக்கோ, பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ நடத்திட இன்று வரை அனுமதி மறுக்கப்படுகிறது. அதையும் இந்த எடப்பாடி அரசு கண்டு கொள்வதில்லை. பலியான குடும்பங்களைப் பார்க்காத பழனிச்சாமி! தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் மறைந்த மற்றும் காயம் அடைந்த மக்களுக்கு இதுவரை ஆறுதல் கூறக் கூட தூத்துக்குடி வரவில்லை.

Image result for எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாஆனால் கடந்த 21.9.2018 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வாகைகுளம் விமானநிலையம் வந்து இறங்கி கன்னியாகுமரி சென்றார். ஆனால் ஏனோ எடப்பாடி அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் வேலைக்கான உத்தரவை நேரிலும் வழங்க மனமில்லை. பாதிப்படைந்த 19 பேர்களையும் சென்னைக்கு பேருந்து மூலம் அழைத்துச் சென்று பணிநியமன உத்தரவை சென்னையில் 27.09.2018 அன்று வழங்கியுள்ளார். அப்படியென்றால் தூத்துக்குடி மாவட்டத்தை முதல்வர் புறக்கணிக்கிறாரா? தகுதிக்கேற்ற வேலை தரவில்லை! அதே போல் ஸ்டெர் லைட் எதிர்ப்புப் போராட் டத்தில் உயிரிழந்த மற்றும் ஊனமான 19 பேரின் குடும்பங்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி, 27.9.2018 அன்று முதலமைச்சர் சென்னையில் வழங்கிய பணி ஆணையில், தகுதிக்கேற்ற அரசுப் பணி வழங்காமல் பட்டதாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கடைநிலை ஊழியர் (தலையாரி) பணியிடம்தான் வழங்கப்பட்டுள்ளது. தகுதிக்கேற்ற வேலை வழங்காமல் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின்; மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பத்தை ஏமாற்றியுள்ளதை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  வன்மையாகக் கண்டிக்கின்றேன். அரசு மறுபரிசீலனை செய்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பத்தினருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு பி.கீதா ஜீவன் எம்.எல்.ஏ., தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்