முகப்பரு வராமல் தடுக்க வழிமுறைகள்…!!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே முகப்பரு தான். அதனை போக்குவதற்கு இந்த செயல்முறைகள் சிறந்த மருந்தாகும்.
- துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப்பரு தொல்லை ஏற்படாது.
- முகப்பரு இருப்பவர்கள் வேப்பமர பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது.மஞ்சளை, கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.
- மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.