முதலீடாக பெறப்பட்ட ரூ 2,42,00,00,00,00,00 எங்கே ? முக.ஸ்டாலின் கேள்வி..!!
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் 98 புத்துணர்வு ஒப்பந்தங்களில் போட்டு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டது என்ன ஆச்சு என்று முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, செப்.29- பிற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழகம் வந்து முதலீடு தேடுகிறார்கள்; அ.தி.மு.க அரசின் கமிஷன் கலாச்சாரத்தால் தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலங்களை நோக்கி ஓடுகிறார் கள் என்றும், அ.தி.மு.க. அரசின் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் புரிந்தணர்வு ஒப்பந்தங்களுக்கே இன்னும் பதில் வராத நிலையில், 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மாநாட்டில் குஜராத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு எப்படி கிடைக்கும்? என்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :- மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழகம் வந்து முதலீடு தேடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலங்களை நோக்கி அ.தி.மு.க அரசின் கமிஷன் கலாச்சாரத்தால் ஓடுகிறார்கள். அப்படியொரு அவல நிலைமை நீடித்து நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கின்ற நேரத்தில், 2019 ஆம் ஆண்டு ஜனவரி 23-24 ஆகிய தேதிகளில், சென்னையில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், குஜராத்திலிருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்குக் கிடைக்கும் என்று தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்திருப்பது அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருக்கிறது.கானல் நீரான முதல் உலக முதலீட்டாளர் மாநாடு! ஜெயலலிதா நடத்திய முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்றுவரை அந்த முதல் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கானல் நீராகவே, எதற்கும் பயன்படாமல் இருக்கின்றன. சட்டமன்றத்தில்கூட கேள்வி எழுப்பியும், அதற்கு முதலமைச்சரிடமிருந்தோ, தொழில்துறை அமைச்சரிடமிருந்தோ எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய தெளிவான பதில் இதுவரை இல்லை. பெறப்பட்ட முதலீடுகள் குறித்து – அவை உள்ளபடியே பெறப்பட்டிருந்தால், சரியான தரவுகளுடன் ஒரு வெள்ளையறிக்கை வெளியிடக்கூட இந்த அரசுக்குத் தன்னம்பிக்கை இல்லை.
2011 முதல் 2015 வரை முன்மொழியப்பட்ட, 1 கோடியே 55 லட்சத்து 807 ரூபாய் முதலீடுகளில், வெறும் 5620 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டிருக்கிறது என்று வெளிவந்த புள்ளி விவரம், அ.தி.மு.க. அரசின் நிர்வாகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. முன்மொழியப்பட்ட முதலீடுகளில், வெறும் 3.6 சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ளது.வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், தமிழ்நாடு மிகவும் மோசமாகப் பின் தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இல்லாமல், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேதனையுடன் காத்திருக்கும் விரக்தியும், அவலமும் கலந்த நிலை உருவாகியிருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 3.92 லட்சம் பட்டதாரிகளும், 2.87 லட்சம் முது நிலைப் பட்டதாரிகளும், ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கிறார்கள். வேலையில்லாமல் வாடிக்கொண்டிருக்கும் 2.45 லட்சம் பொறியியல் பட்டதாரிகள், பதிவு செய்து விட்டு, பதை பதைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
DINASUVADU