எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா..!அதிமுகவை நெருங்கும் திருமாவளவன்..! அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்

Default Image

தொல் .திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவரது 100 வது பிறந்த நாள் முதல் கொண்டாடி வருகிறது தமிழக அரசு.இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்தது.

எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழக அரசு எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவும் கொண்டாடி வருகிறது.

இதேபோல் சென்னையில் வருகின்ற 30-ந்தேதி நிறைவு பெற இருக்கிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும்படி பிரமாண்ட ஏற்பாட்டை செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கி நடத்துகிறார்.மேலும் அதிமுகவை சார்ந்த அனைத்து அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கான அழைப்பிதழ்களில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றது.

வாழ்த்துரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அமமுக துணைப்பொதுச்செயலாளரும் ,ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர்  டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிமுகவிற்கு முக்கிய எதிரிகளாக கருதப்படும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Image result for அமைச்சர் ஜெயக்குமார் திருமாவளவன்

 

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்  எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என கூறியதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் .திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்