“ரூபாய் 2,01,00,00,000 மோசடி” சென்னையில் 5 இடங்களில் CBI ரைய்டு ..!!

Default Image

201 கோடி வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வங்கியின் தலைவர் லஞ்சம் கேட்டு கொடுக்காததே சி.பி.ஐ. சோதனைக்கு காரணம் என்று S.L.O இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனில்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

S.L.O இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள் கார்ப்பரேஷன் வங்கியில் 201 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக S.L.O இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை அமைந்தகரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, S.L.O இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனில் குமார், வங்கியின் தலைவர் லஞ்சம் கேட்டு கொடுக்காததே சி.பி.ஐ. சோதனைக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்