தடகள போட்டி : தமிழக வீராங்கனைக்கு தங்கம்..!!
புவனேஸ்வரம்:
58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி (13.71 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார்.
சிறப்பு அழைப்பு மூலம் கலந்து கொண்ட ஜப்பான் வீராங்கனை சிமோரா (13.74 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஆர்.நித்யா (13.99 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.
DINASUVADU