நாட்டின்”முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை”விளக்கம் கேட்கும் ஐ.ஜி…!!!
தமிழக முதல்வராக பதிவியேற்ற பழனிச்சாமி 1 வருட தனது கட்சி ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஐ.ஜி விளக்கம் கேட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சேலம் திரும்பும் வழியில் காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வியும் விமர்சனமும் எழும்பியது.
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க துணை கண்காணிப்பாளர், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்களுக்கு வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரிதும் சலசலக்கப்பட்டது முதல்வருக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் சமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதே கேள்வியாக உள்ளது.
DINASUVADU